இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே தமிழ்நடிகையை திருமணம் செய்ய உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே. பெங்களூரை சேர்ந்த மனிஷ் பாண்டே, இந்தியாவுக்காக 23 ஒருநாள் போட்டிகள் 31 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடி வருகின்றார்.
தற்போது விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வரும் இவர் நடிகை அர்ஷிதா செட்டியை திருமணம் செய்ய இருக்கிறார். அது சரி… நடிகை அஷ்ரிதா ஷெட்டி யார் என்று கேட்கிறீர்களா.. அவர் மும்பையை சேர்ந்தவர் ஆவார். உங்களுக்கு நன்றாகவே தெரியும் அஷ்ரிதா தமிழில் உதயம் NH4, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.
நீண்ட நாட்களாகவே மனிஷ் பாண்டேவும், அஷ்ரிதாவும் காதலித்து வந்துள்ளனர். இதனை இருவரும் வெளிப்படையாக இதுவரையில் தெரிவிக்கவில்லை. இதனால் யாருக்கும் தெரியாமலேயே இருந்துவந்தது. இந்த நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டனர். வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி இவர்களது திருமணம் மும்பையில் நடக்கிறது.
இந்த திருமண விழாவில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவார்கள் என்று தெரிகின்றது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.