Categories
மாநில செய்திகள்

ஒரு வாரத்திற்குள் மாற்றுச் சான்றிதழ்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். மாத ஊதியம் இன்றி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான கால கட்டத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் செலுத்த சொல்லி மாணவர்களையும், பெற்றோர்களையும் வற்புறுத்தி வருகின்றனர். இது பெற்றோர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை அளிக்கிறது.

இதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் மாற்றுச் சான்றிதழ் கேட்கும் போது தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி தர மறுப்பதாக புகார்கள் எழுந்தது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீதிமன்றம் தனியார் பள்ளிகள் ஒரு வாரத்திற்குள் மாற்றுச் சான்றிதழை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். TC வழங்க மறுக்கும் பள்ளிகள் மீது கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |