சேலத்தில் நேருக்கு நேர் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 33 பேர்படுகாயம் அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இருந்து சேலம் நோக்கி அரசு டவுன் பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சென்னை டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அயோத்திப் பட்டணம் அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது. அதேசமயத்தில் அவ்வழியாக கல்லூரி மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு சின்ன கவுண்டர் புறம் நோக்கி தனியார் கல்லூரி பேருந்து வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அரசு டவுன் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
விபத்தில் இரண்டு பேருந்துகளில் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும் அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கல்லூரி பேருந்தில் வந்த மாணவ மாணவிகள் உட்பட 33 பேர் படுகாயமடைந்தனர். பின் இதுகுறித்து ஆம்புலன்ஸ் காவல்துறை அதிகாரிகளுக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அங்கிருந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து இரு தரப்பு பேருந்து ஓட்டுநர்கள் இடமும் காரியாபட்டி காவல்துறை அதிகாரிகள் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.