தலீபான்கள் ஆப்கானிஸ்தான் தேசியக் கொடியை மாற்றக்கூடாது என இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கைப்பற்றியதோடு அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கைவசம் சென்றுள்ளது. இதனால் நாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் தேசியக் கொடிகளை தலீபான்கள் அகற்றி வருகின்றனர். இந்த நிலையில் Nangarha மாகாணத்தில் இருக்கும் Jalalabad பகுதியில் 100க்கும் அதிகமான இளைஞர்கள் ஆப்கான் தேசியக் கொடியை கையில் ஏந்தி சாலையில் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஊர்வலமானது தேசியக் கொடிக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்றது.
Residents of Nangarhar province today held the Afghanistan Islamic Republic flag and demonstrated in the streets. pic.twitter.com/MjFkcdNj3J
— Natiq Malikzada (@natiqmalikzada) August 18, 2021
அதாவது தலீபான்கள் ஆப்கானிஸ்தானின் மூவர்ண தேசிய கொடியை மாற்றக் கூடாது என்பதற்காக போராட்டமானது நடத்தப்பட்டுள்ளது. மேலும் சாலையை வழிமறித்து கொடியை கையில் ஏந்தி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கண்ட தலீபான்கள் அந்த இளைஞர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு இளைஞர்கள் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் இதே போன்று khost மாகாணத்திலும் தேசிய கொடியுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.