தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் தனி வேளாண் நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை மீதான 3-வது நாள் விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , இந்த நிதிநிலை அறிக்கையானது 6 மாதத்திற்கு மட்டுமே, அடுத்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிப்பது வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளமாக மாற்றுவோம் என அவர் தெரிவித்தார். அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை நாம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளோம். இதனால் ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் கோடி என வருடத்திற்கு 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.