Categories
உலக செய்திகள்

தலீபான்கள் செய்த மோசமான செயல்.. ஹசாராக்கள் தலைவரின் சிலை தகர்ப்பு.. வெளியான புகைப்படம்..!!

ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் என்ற நகரத்தில் வைக்கப்பட்டிருந்த ஹசாரா சமூகத்தினுடைய தலைவரான அப்துல் அலி மஸாரின் சிலையை தலீபான்கள் தகர்த்ததாக தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில், மலைப்பகுதியில் வசிக்கும் மக்களை ஹசாராக்கள் அல்லது ஹசாராஜத் என்று அழைப்பார்கள். இதற்கு முன்பு, தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்த சமயத்தில், ஹசாராக்களின் தலைவராக இருந்த அப்துல் அலி மஸாரியை தலிபான்கள் கடந்த 1995-ஆம் வருடத்தில் தூக்கிலிட்டார்கள்.

அதன்பின்பு, பாமியான் நகரில் அவருக்கு சிலை வைக்கப்பட்டது. எனினும் ஹசாரா இன மக்கள் மீது அளவுக்கு அதிகமாக வெறுப்பு வைத்துள்ள தலிபான்கள் அவர்களைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மீண்டும் ஆப்கானிஸ்தான், தலிபான்கள்  கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது.

எனவே, ஹசாராக்களை தாக்க தொடங்கி விட்டார்கள். அதில் முதல் குறியாக ஹசாராக்கள் தலைவரான அப்துல் அலி மஸாரியின் சிலையை வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தகர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |