Categories
சினிமா தமிழ் சினிமா

10 வயது சிறியவரை…. இரண்டாவதாக திருமணம் செய்கிறாரா சுரேகா வாணி…. அவரே தந்த விளக்கம்….!!!

நடிகை சுரேகா வாணி தன்னைவிட 10 வயது சிறியவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் விஸ்வாசம், விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது கணவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் நடிகை சுரேகா வாணி தன்னை விட 10 வயது குறைந்த வரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து அவர் பேசுகையில், தனக்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எந்த யோசனையும் இல்லை. தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். மேலும் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கோபத்துடன் கூறியுள்ளார்.

Categories

Tech |