Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

100 நாள் வேலை திட்டம்…. ஆய்வு செய்த அதிகாரிகள்…. கலெக்டர் உத்தரவு….!!

ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த இருளர் இன மக்களான 7௦ நபர்களுக்கும் அதிகமானவர்களுக்கு 100 நாள் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் ஊராட்சி பகுதியில் இருக்கும் இந்திரா நகரில் 70-க்கும் அதிகமான இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வேலைவாய்ப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் வறுமையில் வாடி வருகின்றனர். அதனால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவின் படி மணிமங்கலத்தில் இருக்கும் இந்திரா நகர் இருளர் குடியிருப்பு பகுதியில் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் 5 குடும்பங்களின் ஆவணங்களை சரிபார்த்து 100 நாள் வேலைக்கான அடையாள அட்டையை வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அலுவலர் கே. முத்துக்குமார் என்பவரும் அதே பகுதிக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்து 28 குடும்பங்களின் ஆவணங்களை சரிபார்த்து மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழாக 100 நாள் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |