அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் வீடு கட்ட நினைப்பவர்களுக்கும் முன்பணம் பெற்றுக்கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வீடு கட்டும் திட்டத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் வீட்டை கட்ட மார்ச் 31 2022 வரை வீடு கட்டுவதற்கான முன் பணத்தை(Housing Building Advance) பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அக்டோபர்- 1 2020 இல் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் மார்ச் 2022 வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது. 7.9 சதவீதம் வட்டி விகிதத்தில் முன்பணம் பெறலாம். 5 ஆண்டுகள் பணியில் இருக்கும் தற்காலிக ஊழியர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.