பிரதமர் மோடி , சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் மாமல்லபுரம் கிளம்பினர்.
கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், கோவளம் பிஷேர்மேன் கோவ் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த பிரதமர் மோடி மாமல்லபுரம் நோக்கி கிளம்பினர்.மாமல்லபுரத்தில் இரு தலைவர்களின் சந்திப்பு நடைபெறுகின்றது. தலைவர்களை வரவேற்க ஏராளமான மாணவ , மாணவிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தலைவர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இரு தலைவர்களையும் பார்க்க அதிகமான மக்கள் மகாபலிபுரம் வந்துள்ளனர்.
இரண்டு தலைவர்களும் முக்கியத்துவமான பேச்சுவார்த்தை ஈடுபடும் நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இருப்பினும் வழிநெடுக எங்கு பார்த்தாலும் கலை நிகழ்ச்சிகள்நடைபெறுகின்றது. பிரதமர் மோடி , சீன ஷி ஜின்பிங் சந்திக்கும் இடத்தில் கூடும் மக்கள் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தான் உள்ளே அனுமதிக்கிறார்கள். குறிப்பிட்ட அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே இருதலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.