Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாய் கண்டித்ததால்…. பிளஸ் டூ மாணவி எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாதனூத்து இந்திராநகர் பகுதியில் சுடலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வி  அடிக்கடி டிவி, செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால் அவரது தாய் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த தமிழ்ச்செல்வி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக் குளித்துள்ளார்.

இதனால் உடல் கருகிய தமிழ்செல்வியை அவரது குடும்பத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |