முகம்மது பின் ராஷித் சோலார் எரிசக்தி வளாகத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மத் பின் ராஷித் மக்தூம் துவங்கி வைத்துள்ளார்.
துபாயில் உள்ள முகம்மது பின் ராஷித் சோலார் எரிசக்தி வளாகத்தில் சூரியஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை துவங்கி வைப்பதற்க்கு விழா ஓன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் அமீரக துணை அதிபர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளர் என அனைவரையும் மின்சாரம் மற்றும் குடிநீர் வாரியத்தின் தலைமை அதிகாரியும் மேலாண்மை இயக்குனரும் இணைந்து வரவேற்றுள்ளனர். மேலும் அந்த விழாவிற்கு துபாய் ஆட்சியாளர் உடன் அந்நாட்டின் துணை ஆட்சியாளர் , அரசு ஊடக கவுன்சிலின் தலைவர் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் வருகை புரிந்துள்ளனர். இந்த மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டமானது 5 கட்ட திட்ட பணிகளாக நடைபெறும். இதில் முதல் கட்ட திட்ட பணியை துபாய் ஆட்சியாளர் துவங்கி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து துபாய் ஆட்சியாளர் கூறியதாவது “துபாயில் முகம்மது பின் ராஷித் சோலார் எரிசக்தி வளாகத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அங்கு உள்ள 90 ஆயிரம் வீடுகளுக்கு தேவையான 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்துடன் இணைந்து தனியார் துறையும் செயல்பட உள்ளது. இந்நிலையில் வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் 5000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 2050ஆம் ஆண்டுக்குள் 75 சதவீதம் தூய மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எரிசக்தி திட்டத்துடன் இணைந்து செயல்பட தனியார் துறைகள் 4,000 கோடி திர்ஹாம் முதலீடு செய்துள்ளது. இந்த நடப்பு ஆண்டு முடிவதற்குள் துபாய் நகருக்கு 13 சதவீதம் எரிசக்தி உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்