Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பில் ஆலோசனை!”.. வரும் 24-ஆம் தேதி ஐ.நா சபை சிறப்பு கூட்டம்..!!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், ஆப்கானிஸ்தான் நிலைமை தொடர்பில் இம்மாதம் 24 ஆம் தேதி அன்று சிறப்புக் கூட்டம் நடத்தவுள்ளது.

ஆப்கானிஸ்தானில், 20 வருடங்களாக அரசப்படையினருடன் மோதி வந்த தலிபான்கள் தற்போது நாட்டை கைப்பற்றி விட்டார்கள். இந்த தகவல் வெளிவந்தவுடன் உலகின் பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் தூதரகங்களை காலி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டன.

மேலும், தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்குரிய சுதந்திரம் பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தலீபான்களால், மனித உரிமை மீறல்களும் நடக்கிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின், இந்த நிலை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், இம்மாதம் 24-ஆம் தேதியன்று சிறப்பு கூட்டம் நடத்த முடிவெடுத்துள்ளது. இதில், ஆப்கானிஸ்தானில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |