மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் வருடம் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். எனவே கொடநாடு எஸ்டேட்டில் என்ன நடந்தது? என்பது இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயனிடம் காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து அதிமுகவினர் இன்று வெளிநடப்பு செய்தனர். மேலும் கொடநாடு வழக்கில் தன்னுடைய பெயரை சேர்க்க சதி நடப்பதாகவும் எடப்பாடி குற்றம்சாட்டினார். இந்நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் நாளை 11 மணிக்கு ஆளுநர் பன்வாரிலாலை எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ், துணைத் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மர்மமான முறையில் நடந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாக இபிஎஸ்- ஓபிஎஸ் ஆளுநரை சந்திக்க உள்ளனர்.