Categories
தேசிய செய்திகள்

“எங்க வீட்டு டிவிய கொஞ்சம் சரி பண்ணி குடுங்க அங்கிள்”…. பக்கத்து வீட்டுக்காரரால்… 6 வயது சிறுமி நேர்ந்த கொடுமை….!!!

மும்பை மாவட்டத்தில் ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள். அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளார். வீட்டில் உள்ள குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு யாரும் இல்லாததால் இரண்டு குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டு விட்டு வேலைக்கு சென்று விடுவார்கள். அதுவுமில்லாமல் தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் குழந்தைகள் வீட்டிலேயே டிவி பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இந்நிலையில் கடந்த வாரம் வீட்டில் உள்ள டிவி கேபிள் வேலை செய்யவில்லை.

இதனால் 6 வயது சிறுமி பக்கத்து வீட்டில் இருக்கும் 45 வயதான ஒருவரை உதவிக்கு கூப்பிட்டு உள்ளார். அந்த நபர் டிவியை சரி செய்வதுபோல் வீட்டிற்குள் நுழைந்து அந்த 6 வயது சிறுமியை அறைக்குள் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் பயந்துபோன அந்த சிறுமி கத்தி கூச்சல் போடவே வெளியில் இருந்த 14 வயது சகோதரர் அங்கு வந்து சிறுமியை அந்த நபரிடம் இருந்து காப்பாற்றினார். பின்னர் போன் செய்து நடந்த சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர். புகாரின் பெயரில் அந்த இளைஞனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுவனின் துணிச்சலான செயலை காவல்துறையினர் பாராட்டினர்.

Categories

Tech |