தேசிய சமையல் எண்ணெய் பாமாயில் திட்டத்திற்கு ஒரு பகுதியா வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பாமாயில் சாகுபடி திட்டத்திற்கான சாகுபடியை தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ. 11,040 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய அரசின் பங்காக ரூ. 8,844 கோடியும் மாநில அரசின் பங்காக ரூ. 2,196 கோடியும் இவற்றுடன் மானியத் தொகையும் அடங்கும். எண்ணெய் வித்துக்கள் மற்றும் பாமாயில் ஆகியவற்றின் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.