Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக அமைக்கப்படும் சந்தை…. பொதுமக்களின் கோரிக்கை…. ஆய்வு செய்த கலெக்டர்….!!

மஞ்சள் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குருகாவூர் சாலையில் இருக்கும் உழவர் உற்பத்தியாளர் வேளாண் வணிக மையத்தை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது அவர்களிடம் குழுவில் எத்தனை விவசாயிகள் உள்ளனர் என கேட்டுள்ளார். அதன்பின் குழுவில் இல்லாத விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறதா எனவும், எந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது எனவும், வேறு ஏதாவது பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என போன்ற பல விவரங்களை கேட்டுள்ளார்.

இதனையடுத்து உற்பத்தியாளர் குழுவினர் பால் பொருட்களான வெண்ணை மற்றும் தயிர் போன்றவைகளை உற்பத்தி செய்வதற்கு பயிற்சி அளித்தால் கூடுதலாக விற்பனை செய்வோம் என அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் அப்பகுதியில் மஞ்சள் கொள்முதல் நிலையம் அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதை பரிசீலனை செய்வதாக கூறி எல்லா விவசாயிகளுக்கும் தட்டுப்பாடின்றி உரம் விற்பனை செய்வதற்காகவும், விவசாயிகளின் தேவைக்கேற்றவாறு விதை பொருட்களை விற்பனை செய்யவும் மற்றும் பருவநிலை குறித்து உற்பத்தியாளர்களுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பின்னர் பேருந்து நிலையம் அருகில் சந்தைமேடு பகுதியில் புதிதாக உழவர் சந்தை அமைக்க இருக்கும் இடத்தை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்துள்ளார். இதில் எத்தனை ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளன என அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அதற்கு 14 ஏக்கர் ஏரி புறம்போக்கு இடம் உள்ளதாகவும், இதில் காய்கறி, மாடு மற்றும் ஆடு சண்டை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்குப் பிறகு பேருந்து நிலையம் அருகில் சந்தை அமைந்தால் பொதுமக்கள் வந்து செல்வதற்கு எளிதாக இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து புறம்போக்கு நிலத்தின் அளவுகள் மற்றும் வெள்ளை வரைபடத்தை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |