Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப்ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’… கலக்கலான ‘தில்லாலங்கடி லேடி’ பாடல் ரிலீஸ்…!!!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் நான்காவது பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. இதை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார். மேலும் இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது இவர் அன்பறிவு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதில் சிவகுமாரின் சபதம் படத்தை ஹிப்ஹாப் ஆதியே இயக்கி நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மாதுரி கதாநாயகியாக நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் சிவகுமாரின் சபதம் படத்தில்  இடம்பெற்ற ‘தில்லாலங்கடி லேடி’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த பாடல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Categories

Tech |