Categories
மாநில செய்திகள்

வெள்ளை வேஷ்டி ….. வெள்ளை சட்டை ….. தோளில் துண்டு ….. கவர்ந்த மோடி …!!

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்று வரும் நிலையில் மோடி வேஷ்டி சட்டை அணிந்து அனைவரையும் கவர்ந்துள்ளது.

இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்திய பிரதமர் மோடியுடன் மகாபலிபுரத்தில் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று மதியம் 12.30 மணிக்கு வந்த பிரதமர் மோடி மகாபலிபுரம் அருகேயுள்ள கோவளம் பிஷேர்மேன் கோவ் நட்சத்திர  ஓட்டலில் தங்கினார். அதே போல 1.30 மணிக்கு வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலிலும் தங்கி ஓய்வெடுத்தனர்.

 

இருதலைவர்களுக்கும் வழிநெடுகிலும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதற்காக சென்னை மற்றும் மகாபலிபுரம் என 16,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக  #gobackmodi என்ற ஹேஷ்டக்கும் , சீன அதிபர் ஷி ஜின்பிங்_கை வரவேற்று #TN_welcomes_XiJinping   ஹேஷ்டாக் ட்ரெண்டாகின. சீன அதிபரை வரவேற்கும் தமிழக மக்கள் இந்திய பிரதமரை வெறுக்கிறார்கள் என்று பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் தன்னை எதிர்த்து #gobackmodi என்று பதிவிட்டவர்கள் அனைவரையும் அரவணைக்கும் விதமாக பிரதமர் மோடி தமிழ் ட்வீட் செய்து அனைவரையும் கவர்ந்தார். மோடியின் இந்த ட்வீட் பாஜகவினர் தமிழகத்துக்கு எதிரானவர் அல்ல என்று பறைசாற்றியது.  முன்னதத்தைக் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மீண்டும் பிரதமர் மோடி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி , வெள்ளை சட்டை , தோளில் தூண்டு என ஆடை அணிந்து நான் என்றும் தமிழை விரும்புவேன். தமிழை ஆதரிப்பேன் , தமிழ் மக்கள் எனக்கு பிடிக்கும் என்று உணர்த்தும் வகையில் ஒட்டு மொத்த தமிழர்களின் மனதில் இடம் பிடித்தார். அதே போல சீன அதிபர் ஷி ஜின்பிங்_கும் வெள்ளை சட்டை அணிந்து வந்தார். இருவரும் கைகுலுக்கி வரவேற்றுக் கொண்டனர். மோடி வேஷ்டி , சட்டை அணைந்த புகைப்படம் தமிழர்களால் பாராட்டப்பட்டதோடு வைரலாகி வருகின்றது.

 

Categories

Tech |