Categories
உலக செய்திகள்

நைஜர் நாட்டில் தீவிரவாதிகள் அட்டூழியம்.. கண்மூடித்தனமான தாக்குதல்.. குழந்தைகள் உட்பட 37 பேர் உயிரிழப்பு..!!

நைஜர் நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 37 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜர் நாட்டில் ஐ.எஸ், அல்கொய்தா உட்பட பல தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத அமைப்புகள், அரசபடை மற்றும் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், நைஜரின் டில்லெப்ரி மாகாணத்தில் இருக்கும் டேரி டே கிராமத்தினுள் தீவிரவாதிகள், துப்பாக்கிகளுடன் நேற்று புகுந்துள்ளார்கள்.

அதன்பின்பு, அவர்கள் அங்கிருந்த மக்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 37 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இதில் 14 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளது. எந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள், இத்தாக்குதலை நடத்தினார்கள்? என்று தெரிவிக்கப்படவில்லை.

Categories

Tech |