ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களின் உரிமைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தலிபான்கள் அளித்த பதில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியதற்கு பிறகு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றினர். இந்நிலையில் தலிபான் போராளிகளுக்கும், பெண் பத்திரிக்கையாளருக்கும் இடையிலான உரையாடல் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தின் கீழ் பெண்களின் உரிமைகள் பற்றி பெண் பத்திரிகையாளர் தலிபான் போராளிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்விக்கு ஷரியா சட்டத்தின் கீழ் பெண்களுக்கான உரிமை வழங்கப்படும் என்று தலிபான் போராளி ஒருவர் பதிலளித்துள்ளார்.
The laughter says it all #Taliban pic.twitter.com/zznkH2YRrl
— Manak Gupta (@manakgupta) August 18, 2021
அதே சமயம் தலிபான்கள், பெண் அரசியல்வாதிகளில் மக்கள் வாக்களிக்க அனுமதிப்பார்களா மற்றும் ஜனநாயக ஆட்சியை ஏற்றுக் கொள்வார்களா என்று போராளிகளிடம் அந்த பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அந்த போராளி சிரித்ததோடு கேமரா மூலம் படம் பிடிப்பதனை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். எனவே தலிபான் போராளிகளின் இந்த சிரிப்பானது பெண்களுக்கு கேள்விக்குறியான நிலையையே ஏற்படுத்தும் என்று பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.