மும்பையில் வழக்கறிஞர் ஏக்நாத் தேஷ்முக் என்பவர் தாதரில் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2008ஆம் ஆண்டு இவருக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக மனைவி அடுத்த முறை அவர் கர்ப்பமாகும்போது , அவர் வயிற்றில் உள்ள குழந்தை என்ன என்பதை பரிசோதித்து தெரிந்து கொண்டுள்ளார். அதில் இரண்டாவதும் பெண் குழந்தை உருவாகி உள்ளது. இதனால் கர்ப்பத்தை கலைத்து விட்டு மீண்டும் அவர் கர்ப்பமாகும் போதெல்லாம் பெண் குழந்தை இருப்பது தெரிந்து கருக்கலைப்பு செய்துள்ளார்.
இதேபோன்று 8 முறை அவரது மனைவிக்கு அபார்ஷன் செய்துள்ளார். பின்னர் அந்த பெண் 40 வயதான பிறகு ஆண் குழந்தை கரு உருவாவதற்கு 1,500க்கும் மேற்பட்ட முறை ஹார்மோன் ஊசி உட்பட பல ஊசிகளை செலுத்தியுள்ளார். ஹார்மோன் ஊசி இந்தியாவில் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கொடுமைகளைத் தாங்க முடியாத அந்த பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.