Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. காணாமல் போன சிறுவர்கள்…. தேடுதல் பணி தீவிரம்….!!

கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள ஆலப்புழா மாவட்டத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்ததை கொண்டாடும் விதமாக கண்ணன் தனது நண்பர்களான இர்பான் உள்ளிட்ட 6 பேருடன் இணைந்து ஆலபாடு பகுதியில் இருக்கும் கடலில் குளித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென கண்ணனும், இர்பானும் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் இரண்டு பேரையும் தேடியுள்ளனர்.

இதனையடுத்து சிறுவர்களின் சத்தம் கேட்டு அருகிலுள்ளவர்கள் விரைந்து சென்று காணாமல் போனவர்களை தேடியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரமாக மாயமான சிறுவர்களை தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போனவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |