Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அகவிலைப்படியை வழங்க வேண்டும்… ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர்… தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு…

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பரமக்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசு கொண்டுவந்த புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும், கொரோனாவால் நிறுத்தி வைத்த அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்ட காலத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தாசில்தார் தமிம்ராஜா தலைமை தங்கியுள்ளார். மேலும் துணை தாசில்தார் ரங்கராஜன், மாவட்ட இணைசெயலாளர் சுந்தர்ராஜன், வருவாய் ஆய்வாளர் குமரன் என பலரும் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Categories

Tech |