சட்டவிரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகராஜபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் பின்புறமாக சாராயம் விற்பனை செய்த சரஸ்வதி மற்றும் முருகன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதைப்போல் எண்டியூர் கிராமத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஒரு வீட்டின் பின்புறத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைவாக சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் குப்பன் என்பவரை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த 40 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.