ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்கள் பிடியில் உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் தங்களுடைய உயிருக்கு பயந்து அங்குள்ள மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அதேபோன்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களோடு சிறப்பு விமானம் மூலம் தலைமறைவாகி ஓடிவிட்டார் என்று தகவல் வெளியானது.
பணம் நிரப்பப்பட்ட 4 கார்கள் மற்றும் ஹெலிகாப்டரோடு அஷ்ரப் கனி தப்பி ஓடியதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய அவர் மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை ஐக்கிய அரபு அமீரகம் உறுதிப்படுத்தியிருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனிக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.