நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமே வங்கிக்கணக்கு இருக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி அவர்களால் 2014ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாத 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள், மத்திய மாநில அரசு நிதியுதவிகளும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பது தெரியாது. அப்படி தெரிந்துகொள்வதற்கு வங்கிக்கு அலையாமல் வீட்டிலிருந்தே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் தெரிந்துவிடும். 18004253800 அல்லது 1800112211 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். முக்கியமாக உங்களது ஜன் தன் கணக்குடன் இணைக்க்கப்பட்டுள்ளசெல்போன் நம்பரிலிருந்து தான் கொடுக்க வேண்டும். https://pfms.nic.in/NewDefaultHome.aspx# என்ற இணையதளத்தில் சென்று உங்களது அக்கவுண்ட் நம்பர் போன்ற விவரங்களை வைத்தும் பேலன்ஸ் பார்க்க முடியும்.