நகையை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை காணவில்லை என்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அப்போது சந்திரசேகரன் வீட்டில் வேலை பார்த்து வரும் மகாலட்சுமி என்ற பெண்ணை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது மகாலட்சுமி நகையை திருடியதாக உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அதன்பிறகு மகாலட்சுமி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.