Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாயம் செய்ய தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு… மலைகிராம மக்களின் கோரிக்கை…!!

வருசநாடு வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களில் விவசாயம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

தேனி மாவட்டம் கடமலை-மயிலை பகுதியிலுள்ள ஏராளமான வனப்பகுதிகளை  வருசநாடு, மேகமலை, கண்டமனூர் என 3 வனசரகங்களாக பிரித்து வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மலைகிராம மக்கள் வனப்பகுதியில் எலுமிச்சை, பீன்ஸ்  போன்றவற்றை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் வருஷநாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்களில் விவசாயம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வனத்துறையினர் கண்டமனூர், வருஷநாடு மற்றும் மேகமலையில் உள்ள மலைக்கிராம மக்களுக்கு நோட்டீஸ் மூலம் விவசாயம் செய்யக்கூடாது என அறிவித்துள்ளனர். மேலும் இந்த உத்தரவை மீறினால் அவர்களின் டிராக்டர், உழவு மாடுகள் பறிமுதல் செய்யப்படும் என்றும், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் இந்த உத்தரவினால் எங்கள் வாழ்வாதாரம் பதிக்கப்படும் எனவும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீண்டும் பெறவேண்டும் எனவும் மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |