சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சிம்பிள் ஒன் மின்சார பைக்கை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தது. இந்த பைக் ரூ. 1,09,999 என்ற விலையில் அறிமுகமான சிம்பிள் ஒன் பைக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 60 ஆயிரம் வரையிலான பேம்2 மானியம் கிடைக்கும். மாநில மானியங்கள் இருந்தால் அவையும் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு ஸ்கூட்டர் மானியம் இருப்பதால், இந்த பைக்கை நீங்கள் எளிதில் வாங்கி கொள்ள முடியும்.
தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அனைவரும் மின்சார வாகனங்களை நோக்கியே செல்கின்றனர். மேலும் மின்சார வாகனங்களுக்கு மானியம், சலுகைகள் போன்ற பல ஆஃபர்களை அறிவித்து வருவதால் அவற்றை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்த மின்சார வாகனத்தை நீங்கள் வாங்க விரும்புவார்கள் 60 ஆயிரம் மானியம் மூலம் இந்த பைக்கை எளிதில் வாங்கிக் கொள்ள முடியும்.