Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை…. யாருக்கெல்லாம் கிடைக்கும்…. வெளியான தகவல்…!!!

திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகிறது. ஆனால் அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற நிதி நிலைமை தற்போது சரியாக இல்லை என்பதனால் தாமதம் ஏற்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் திமுக அறிவித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் யார் யாருக்கெல்லாம் இந்த தொகை கிடைக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது .அதன்படி குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கும், 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் குடிசை வீடுகளுக்கு இலவசமாகவும், மற்ற வீடுகளுக்கு 100யூனிட் இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையில் மின்சாரத்தை கொடுக்கிறது.

இதற்கான செலவை தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள் உள்ளன. 73 லட்சம் குடும்பங்கள் 500 யூனிட்டுக்கு கீழ் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். எனவே இந்த 84 லட்சம் குடும்பங்களில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் ரூ.1000  உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |