Categories
உலக செய்திகள்

‘நான் இங்கிருந்து வெளியேற மாட்டேன்’…. ஆப்கானில் உள்ள இந்து கோவில்…. வர மறுக்கும் அர்ச்சகர்….!!

இந்து கோவிலின் அர்ச்சகர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற மாட்டேன்  கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுகிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றினர். இதனை அடுத்து அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கை வசம் சென்றது. இதனால் அங்குள்ள உள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து கோவிலின் அர்ச்சகர் ராஜேஷ்குமார் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  “இக்கோவிலில் எனது மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளாக சேவை புரிந்து வந்தனர். ஆகவே இந்த இடத்தை விட்டு எனது உயிரே போனாலும் நான் வெளியேற மாட்டேன்.

என்னை தலீபான்கள் கொன்றாலும் அதனை நாட்டுக்கான சேவையாகவே கருதுவேன். அதிலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடன் என்னை அழைத்தனர். அவர்களுடன் செல்ல எனக்கு விருப்பமில்லை” என்று கூறியுள்ளார். குறிப்பாக ஆப்கானில் சிறுபான்மையினராக உள்ள இந்தியர்களும் சீக்கியர்களும் இந்தியாவுக்கு வர அனைத்து உதவிகளையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |