ஆட்டோ டிரைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் முத்துகாப்பட்டி மேதரமாதேவி கிராமத்தில் அர்ஜூனன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு ராஜேஷ்குமார் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் செல்வராஜ் மற்றும் அவரது மகன் கார்த்திக் இருவரும் மொபட்டில் வேலையை முடித்து விட்டு முத்துகாப்பட்டிக்கு சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது முத்துகாப்பட்டி பேருந்து நிலையத்தில் அர்ஜூனன் மற்றும் ராஜேஷ்குமார் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அர்ஜூனன் மற்றும் செல்வராஜுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆதிரமடைத்த செல்வராஜ் மகன் கார்த்திக் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து அர்ஜூனனை குத்தியுள்ளார். இதில் அர்ஜூனன் படுகாயம் அடைந்த்துள்ளர்.
இதுகுறித்து சேந்தமங்கலம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கார்த்திக் மற்றும் செல்வராஜை கைது செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த வழக்கு சில வருடங்களாக நடந்து வந்த நிலையில் இதற்க்கான இறுதி விசாரணை நேற்று நடைபெற்றுள்ளது. அதில் கார்த்திக்கிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சரவணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் செல்வராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்துள்ளனர்.