கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தொகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மகாலிங்கம் வளர்க்கும் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாடு மேய்ச்சலுக்கு சென்றுள்ளது. இதனையடுத்து அந்த மாடு 18 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி பசுமாட்டை உயிருடன் மீட்டனர். இதனால் பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை பாராட்டியுள்ளனர்.