Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆசையாக வாங்கிய கார்….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தனக்கு பிடித்த காரை தந்தை விற்றதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள சம்மட்டிபுரம் பகுதியில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனீஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த காரின் நிறம் பிடிக்கவில்லை என்று சங்கரலிங்கம் அதனை விற்க முடிவு செய்துள்ளார். ஆனால் தான் ஆசையாக வாங்கிய காரை விற்க கூடாது என்று முனீஸ்வரன் கூறியுள்ளார். இந்நிலையில் முனீஸ்வரன் வெளியூர் சென்ற சமயத்தில் சங்கரலிங்கம் தனது மகனுக்கு தெரியாமல் அந்த காரை விற்று விட்டார்.

இது குறித்து அறிந்த முனீஸ்வரன் மன உளைச்சலில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று முனீஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |