கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்ட பிறகும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ் திரையுலகின் எவர்கிரீன் நாயகி நதியா தெரிவித்துள்ளார்.
நடிகை நதியா தற்போது லிங்குசாமி இயக்கி வரும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகின்றது. தமிழ் திரையுலகில் எவர்கிரீன் நாயகி என்று போற்றப்படும் நடிகை நதியா திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் மும்பையில் வசித்து வருகிறார். தனக்கு கதை பிடித்திருந்தால் மட்டுமே சில படங்களில் நடிப்பார். தற்போது லிங்குசாமி தெலுங்கில் இயக்கி வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் ஷெட்யூலை நடித்து முடித்துவிட்டு மும்பை திரும்பியுள்ளார்.
பின்னர் அவர் இரண்டாவது ஷெட்யூலுக்கு அவர் நடிக்க வராத காரணத்தினால், லிங்குசாமி யூனிட்டில் இருந்து நதியாவை தொடர்பு கொண்டபோது தான் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: நான் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டேன். என் வீட்டில் என்னுடைய அப்பா அம்மா வீட்டில் வேலை பார்ப்பவர்கள் என்று நான்கு பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக 2 டோஸ் தடுப்பூசி போட்ட பின்னும் தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக நேற்று முன்தினம் நடிகை ஷெரின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.