நடிகர் தனுஷ் தனது மாமனார் வசிக்கும் போயஸ்கார்டனில் புதிதாக வீடு கட்டி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளிலும் நடித்து வருகிறார். அதிலும் தற்பொழுது ஆங்கிலத்தில் ‘தி கிரே மேன்’ மற்றும் இந்தியில் Atrangi Re போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் அண்மையில் தான் நிறைவடைந்துள்ளன.
மேலும் இவர் தெலுங்கில் தனது முதல் படத்திற்கான படப்பிடிப்பில் நடித்து வருகிறார். குறிப்பாக நடிகரும் தனுஷின் மாமனாருமான ரஜினிகாந்த் அவர்கள் வசித்து வரும் போயஸ் கார்டனில் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது தனுஷ் வசித்து வரும் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.