மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியாக தான் பதவி ஏற்றுக்கொண்டதாக நித்யானந்தா பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மதுரை ஆதினம் தமிழகத்தின் மிக பழமையான சைவ சமய திருமடங்களில் ஒன்று. இதன் தலைவர் ஆதீனம் பீடாதிபதி என்று அழைக்கப்படுவார். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவ நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்டது. 292-வது பீடாதிபதியாக அருணகிரி என்பவர் இருந்து வந்தார். தற்போது அவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமான நிலையில், 293வது பீடாதிபதியாக நித்தியானந்தா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவரே அறிவித்துக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நித்யானந்தாவை அதிரடியாக நீக்கிய மதுரை ஆதீனம் இளைய ஆதீனமாக திருவாவடுதுறையை சேர்ந்து சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமி என்பவரை நியமனம் செய்துள்ளனர்.
இப்படி இருக்கும்போது மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக தன் பதவியை கைவிட்டதாக நித்யானந்தா பரபரப்பை கிளப்பி வருகிறார். மேலும் தன் பெயரை 293வது ஜெகத்குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்று மாற்றி கொண்டுள்ளதாகவும், இனி பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆசி வழங்க உள்ளதாகவும் தன் முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. இது தொடர்பாக மதுரை ஆதீன மட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது நித்தியானந்தாவின் அறிவிப்பை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.