மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.
மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அங்குள்ள அர்ச்சுணன் தபசு பகுதியில் சந்தித்துக் கொண்டனர்.பின்னர் அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள சிற்பங்கள் இருவரும் பார்வையிட்டனர். பின்னர் வெண்ணெய் உருண்டை பாறையை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கினார்.
இதை தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் லிங்க வடிவில் சோமாஸ்கந்தர், பள்ளிக்கொண்ட நிலையில் உள்ள ஜலசயன பெருமாள் குறித்தும் , குடைவரைக் கோயில்களை பார்வையிட்டனர். இதற்காக மின்னொளியில் கடற்கரை கோயில் ஜொலித்தது. அதை தொடர்ந்து கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு ரசித்தனர். இதில் பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிகளில் ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்பட்டது. நாட்டியம் நிகழ்த்திய குழுவினருடன் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் காந்தியின் ரகுபதி ராகவ ராஜாராம் இசையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.