Categories
ஆன்மிகம் இந்து

திருமணத் தடை நீங்க செய்ய வேண்டிய சிறப்பு பரிகாரங்கள்…. கட்டாயம் பண்ணுங்க… நல்லதே நடக்கும்…!!!

சிலருக்கு திருமணங்கள் எளிதில் நடந்துவிடுகிறது. ஆனால், ஒருசிலருக்கு எவ்வளவு வரன் தேடியும் அமைவதேயில்லை. 30 வயதிற்கு மேல் பலர் திருமணம் ஆகாமல் உள்ளனர். இப்படி திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமண யோகம் கூடி வர சில பரிகாரங்கள் உள்ளது. இறைவழிபாட்டின் மூலம் நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முடிவு காணமுடியும். அந்த வகையில் திருமண யோகம் கூடிவர இந்த பிரார்த்தனைகளை செய்யலாம்.

திருமண தோஷம் உள்ள ஆணோ அல்லது பெண்ணோ உங்கள் ஊரிலுள்ள துர்க்கை அம்மன் கோவில் அல்லது சந்நிதியில், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி, வழிபட்டு வர வேண்டும். இது போன்று 27 வெள்ளிக்கிழமைகள் செய்து வர திருமண தோஷம் நீங்கி விரைவிலேயே நல்ல வரன் மற்றும் வது அமையும்.

கும்பகோணத்திற்கு அருகே இருக்கும் “திருமணஞ்சேரி” என்ற கோவிலுக்கு சென்று அக்கோவிலின் இறைவனான சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பாளை வணங்கி, அக்கோயிலை 9 முறை வலம் வந்து வேண்டுதலை முடிக்க, 90 நாட்களுக்குள் திருமணம் தோஷம் கொண்ட ஆண்களுக்கும், பெண்களும் அத்தோஷங்கள் நீங்கி சிறப்பான திருமண சம்பந்தம் அமையும்.

Categories

Tech |