ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை போற்றும் விதமாக அவருடைய பிறந்த நாளன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசு சார்பாக வழங்கப்படுகிறது. இந்த விருது செப்டம்பர் 5ஆம் தேதியன்று ஒவ்வொரு வருடமும் குடியரசுத் தலைவரால் வழங்கப்படம்.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 44 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி மணிகண்டம், பிராட்டியூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷா தேவிக்கும், ஈரோடு மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லலிதாவுக்கும் ஆகிய 2 பேருக்கும் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.