தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் பொது இடங்களில் தனிநபர்கள் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் அலட்சியமாக இருக்கின்றனர். பொது இடங்களில் மக்கள் கூடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மக்களின் அலட்சியத்தால் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு வரும் என்று கூறப்படுகிறது.