ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி நேற்று காலமானார். அவருக்கு வயது 76. தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் தமிழிசையின் தாயாரும், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து தெலுங்கானாவில் இருந்து தாயார் உடல் கொண்டுவரப்பட்டு சென்னையில் இன்று இறுதி சடங்கு நடக்க உள்ளது தமிழிசை தெரிவித்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தாயார் கிருஷ்ணகுமாரியின் உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையின் தாயார் கிருஷ்ணகுமாரியின் உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.