தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் பணகுடி, களக்காடு, கோட்டைக்கருங்குளம், திசையன்விளை ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் பணகுடி, காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையார்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை, தெற்கு வள்ளியூர், வள்ளியூர் டி. பி. ரோடு, நம்பியான்விளை மற்றும் பக்கத்து கிராமங்கள், கோதைசேரி, வன்னியன்குடியிருப்பு, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் கிராமங்கள், குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், தெற்குகள்ளிகுளம், திசையன்விளை, பாப்பான்குளம், திருவம்பலாபுரம், மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
கன்னியாகுமரி மாவட்டம் வல்லங்குமரன்விளை விநியோக பிரிவுக்குட்பட்ட என்ஜிஓ காலனி உயரழுத்த மின் பாதையில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் புதிய மின்மாற்றி அமைக்கும் பணிகள் காரணமாக இன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை என்ஜிஒ ஏ காலணி, என்ஜிஒ பி காலணி, கணபதிநகர் பகுதியில் மின் வினியோகம் இருக்காது.