மறைந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் குறித்து முக்கிய சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட நிலையில் வரும் 28ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கில் தனது பெயரை சேர்க்க சதி நடப்பதாக குற்றம் சாட்டி வாருகிறார்.
இந்நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று 11 மணிக்கு ஆளுநர் பன்வாரிலாலை எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ், துணைத் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மர்மமான முறையில் நடந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாக இபிஎஸ்- ஓபிஎஸ் ஆளுநரை சந்திக்க உள்ளனர்.