இந்தியா உடனான அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் நிறுத்தியுள்ளதாக இந்திய ஏற்றுமதி அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 85% உலர் பழங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவில் உலர் பழங்கள் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
ஆனால் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தாலும் மற்ற நாடுகளுடனான பொருளாதார உறவுகளை அவர்கள் வளர்த்தெடுத்துதான் ஆகவேண்டும். ஆகவே இந்த இழுபறி நிலை தற்காலிகமானதுதான் எனவும் இருப்பினும் இதன் தற்காலிக பலன்களை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்றும் இந்திய ஏற்றுமதி கழகம் கவலை தெரிவித்துள்ளது.