Categories
தேசிய செய்திகள்

HappyNews: ஒவ்வொரு மாதமும் ரூ.3,000….. அரசு புதிய சூப்பர் அறிவிப்பு….உடனே போங்க….!!!!

பிரதம மந்திரி கிஸான் மன் தன் யோஜனா  திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகள், 60 வயதை அடையும் போது அவர்களுக்கான ஓய்வு ஊதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 வழங்கப்படும்.ஆண்டுக்கு 36,000 வரை பெற முடியும். 5 ஏக்கர் வரையில் விவசாய நிலம் கொண்டிருக்கும் விவசாயி களுக்கு இந்த திட்டம் பொருந்தும். அவர்களில் 18 முதல் 40 வயது வரையிலான விவசாயிகள் இந்த திட்டத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

அவர்களுடைய வயதுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்த வேண்டும். அவர்கள் ஓய்வு பெறும் (60) வயதை அடையும் வரை இந்த நிதியை செலுத்த வேண்டும். அதற்கு நிகரான தொகையை அரசும் அவர்கள் கணக்கில் செலுத்தும். ஓய்வு பெற்ற பிறகு, இந்தக் கணக்கில் இருந்து ஓய்வு ஊதியம் மாதாமாதம் அவர்களுக்கு வழங் கப்படும். ஒரு குடும்பத்தில் உள்ள கண வன் மனைவி என இருவரும் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின்கீழ் தனித்தனியாக இணைந்து கொள்ளலாம்.

Categories

Tech |