அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் மாறுபாட்டை தடுப்பதற்கு வயது வித்தியாசமின்றி அனைவரும் கொரோனா குறித்த கூடுதல் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வல்லுனர்கள் பரிந்துரை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து பகுதிகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதிலும் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. மேலும் தற்போது அமெரிக்காவில் டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் கொரோனா குறித்த தடுப்பூசியின் 2 ஆவது டோஸ்ஸை பொதுமக்களுக்கு செலுத்தி 8 மாதங்கள் ஆகிவிட்டது.
இந்நிலையில் வல்லுநர்கள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதாவது அமெரிக்காவில் வயது வித்தியாசமின்றி அனைவரும் கொரோனா குறித்த கூடுதல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதாகும். இதனையடுத்து இவ்வாறு அனைவரும் கொரோனா குறித்த கூடுதல் தடுப்பூசியை செலுத்தி கொள்ளும் போது அது டெல்டா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் என நம்பப்படுகிறது.