Categories
உலக செய்திகள்

தலிபான்களால் அலரி போன ஆப்கானிஸ்தான்…. 26 பேரை மீட்ட ஆஸ்திரேலியா…. தகவல் வெளியிட்ட பிரதமர்….!!

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 26 பேரை ஆப்கானிஸ்தானின் தலைநகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து விமானத்தின் மூலம் மீட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் ஆப்கானிஸ்தானிலுள்ள பல பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளார்கள். இதனால் ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டவர்களை அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டிற்கு மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகராக விளங்கும் காபூலிலுள்ள விமான நிலையத்திலிருந்து ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 26 பேரை தங்கள் நாட்டிற்கு விமானம் மூலம் மீட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கியிருக்கும் ஆஸ்திரேலியர்களை மீட்பதற்காக அங்கு சுமார் 250 ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

Categories

Tech |