Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…. தீயணைப்பு துறையினரின் போராட்டம்….!!

நூல்மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமங்கலம் பகுதியில் நூல்மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த நூல் மில்லில் 16 ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நூல்மில் எந்திரத்தில் திடீரென தீப்பொறி ஏற்பட்டது. இதனையடுத்து சிறிது நேரத்தில் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து வெள்ளகோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 40 லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமாயின. மேலும் நூல்மில் கட்டிடத்தின் மேற்கூரை எறிந்து நாசமானது. ஆனால் இந்த தீ விபத்தில் ஊழியர்களும் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

Categories

Tech |